Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

72,000 அரசு மருத்துவமனைகளில் கழிவறை இல்லை: ஒப்புக்கொண்ட மத்திய அரசு

நவம்பர் 28, 2019 07:30

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இல்லாமல் 72 ஆயிரம் மருத்துவமனைகள் கழிப்பறை இல்லாமல் செயல்படுவதாக மத்திய அமைச்சரே தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கழிவறை வசதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதிலளித்து பேசினார்.

அப்போது, “நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கழிவறை மோசமாக சுகாதாரமின்றி இருப்பதாகவும், சில மருத்துவமனைகளில் கழிவறை வசதிகள் இல்லை என்றும், குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் போன்ற கிராம அரசு மருத்துவமனைகளில் கழிவறை வசதிகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேப்போல், நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 72,000 மருத்துவமனை கழிவறை வசதிகள் இல்லாமல் செயல்படுவதாகவும், 1,15,000 அரசு மருத்துவமனைகளில் ஆண் - பெண் நோயாளிகளுக்கு என தனித்தனி கழிவறை வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சத்திஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தான் கழிவறை வசதி மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்