Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை: 80 வயது தம்பதிக்கு விவாகரத்து

நவம்பர் 28, 2019 07:50

மதுரை: மதுரை திருநகரை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 82). வேளாண்மைத்துறை அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய மனைவி கஸ்தூரி (80). கடந்த 1962-ம் ஆண்டு இவர்களுக்கு விருதுநகர் மாவட்டம் பாலையம்பட்டியில் திருமணம் நடந்தது.

இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர். தன் மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு வேலுச்சாமி, மதுரை மாவட்ட குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, கஸ்தூரி தரப்பில் இருவரும் சேர்ந்து வாழ அனுமதிக்கும்படி கோரப்பட்டது. 

அதற்கு வேலுச்சாமி தரப்பில், கடந்த 25 ஆண்டுகளாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். எனவே விவாகரத்து வழங்கும்படி கோரப்பட்டது.விசாரணை முடிவில், வேலுச்சாமி-கஸ்தூரி இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி சுமதி உத்தரவிட்டார்.

தலைப்புச்செய்திகள்