Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 வழக்கறிஞர்கள் தொழில் செய்ய தடை

நவம்பர் 28, 2019 02:03

சென்னை: சென்னையில் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை மேலாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரில் தொடர்புடைய, 5 வழக்கறிஞர்களை தொழில் செய்ய தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டிருக்கிறது.

சென்னை தியாகராய நகரில் உள்ள சரவணா ஸ்டார்ஸ் நகைக்கடையில், கடந்த 14ஆம் தேதி போலி நகை எனக்கூறி, அதன் மேலாளரிடம், ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய புகாரில், அரசியல் கட்சி பிரமுகர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்த 9 பேரில், சென்னை எண்ணூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீராம், புதுப்பேட்டையைச் சேர்ந்த அமானுல்லா, சென்னை கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த முருகன், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுந்தரேச பாண்டிய ராஜா ஆகிய 5 பேரும் வழக்கறிஞர்கள் ஆவர்.

இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி அளிக்கப்பட்ட புகாரை, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை குழு நேற்றுக்கூடி, ஆய்வு செய்தது.

இதையடுத்து, தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலின் செயலாளர் சி.ராஜாகுமார் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சம்பந்தப்பட்ட 5 வழக்கறிஞர்களுக்கு எதிரான குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக அறியவருவதால், அவர்கள் 5 பேரும் தொழில் செய்ய தடை விதிக்கப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.

வழக்கு விசாரணை முடிவடையும் வரை ஒழுங்கு நடவடிக்கை தொடரும் என்றும், அதுவரையில், நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் நடைபெறும் வழக்குகளில் தொழில் நிமித்தமான விசாரணைகளுக்கு 5 வழக்கறிஞர்களும் ஆஜராக கூடாது என்றும் பார் கவுன்சில் செயலார் அறிவித்திருக்கிறார்.

தலைப்புச்செய்திகள்