Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தல்: உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு

நவம்பர் 28, 2019 02:15

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை இப்போது நடத்த கூடாது என்று தடை கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் 2016 நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பழங்குடியின இடஒதுக்கீடு காரணமாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக இந்த தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

அதன்பின் உள்ளாட்சி தேர்தலை 2017 வருடம் மே 15-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் தேர்வு காலம் என்பதால் அப்போது தேர்தலை நடத்த முடியாது என்று மாநில தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. இதன் வரிசையாக உள்ளாட்சி தேர்தலை பல்வேறு காரணங்கள் சொல்லி தள்ளி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. எப்போது வேண்டுமானலும் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிக்க வாய்ப்புள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றியை பதிவு செய்ய முடிவு செய்துள்ளது. 

ஆனால் திடீர் என்று உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க கோரி திமுக சார்பில் வழக்கு தொடுத்துள்ளது.தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தேர்தல் நடத்த கூடாது. இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் தேர்தல் நடத்த கூடாது என்று வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

திமுக சார்பாக இந்த முறை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொகுதி வரையறை தொடர்பாக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வராத நிலையில் தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக புதிதாக மனு தாக்கல் செய்துள்ளது.

தலைப்புச்செய்திகள்