Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெடிகுண்டு: காவல் துறை ஆணையருக்கு மிரட்டல் ஈமெயில்

நவம்பர் 28, 2019 04:00

மதுரை: உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். சாதாரணமாக இங்குச் சுற்றுலாப் பயணிகள் தொடங்கி, பக்தர்கள் அதிகளவில் வருவதால் பல்வேறு சோதனைகளுக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஈமெயில் ஒன்று மதுரை காவல் துறை ஆணையருக்கு நேற்று இரவு வந்தது. இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் தொலைப்பேசியில் வருவது வழக்கம். மர்ம நபர்கள் பத்திரிகைகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காக இதுபோன்ற மிரட்டல்களை விடுவார்கள்.

ஆனால், காவல் ஆணையருக்கே மின்னஞ்சல் வாயிலாக மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விட்டதால், அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் கோயிலில் காலை முதல் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். சுமார் 400 காவலர்கள் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்ளும் வெளியிலும் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுனர்.

கோயிலுக்கு வருபவர்களைத் தீவிர சோதனைக்குப்பின்னரே காவலர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர். வெடிகுண்டு சோதனைக்காக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களும் வெடிகுண்டுகள் இருக்கிறதா எனக் கோயிலை சுற்றி தேடி வருகிறது. அதே வேளையில், சைபர் கிரைம் காவலர்களும் மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர் குறித்து தகவல்களைத் திரட்டி வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்