Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெளிநாடுகளில் வசிப்போர் : இந்தியர்கள் முதலிடம்

நவம்பர் 29, 2019 06:00

புதுடில்லி: உலக அளவில் தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளில் வசிப்பவர்களில்  இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர். சொந்த நாடுகளை விட்டு வெளிநாடுகளில் படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக குடியிருப்போர் குறித்த கணக்கெடுப்பை மிக்ரேஷன் எனும் சர்வதேச நிறுவனம் நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. 

இதில், இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 17.5 மில்லியன் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அமெரிக்காவிலேயே வசிக்கின்றனர். இந்தியர்கள் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களின் முதல் தேர்வும் அமெரிக்காவாகவே உள்ளது.

உலகில் இடம்பெயர்ந்து வாழ்பவர்களில் மூன்றில் இரண்டு பேர் வேலைக்காக சென்றுள்ளனர். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மூலம் மட்டும் கடந்த ஆண்டு, 78.6 பில்லியன் டாலர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் அதிகம் வசிப்பவர்களில் சீனர்கள் 2வது இடத்திலும், மெக்சிகோ நாட்டினர் 3வது இடத்திலும் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்