Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏழு தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அரசாணை

நவம்பர் 29, 2019 07:00

சென்னை: கவிஞர்கள் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம், நா.காமராசன் உள்ளிட்ட ஏழு தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

அவர்களின் மரபுரிமையாளர்களுக்கு தமிழக அரசு 35 லட்சம் ரூபாய் பரிவுத்தொகையை அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் இதுவரை 149 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் நிகழ்வாண்டில் உளுந்தூர்ப்பேட்டை சண்முகம், நா.காமராசன், முனைவர் இரா இளவரசு, தமிழறிஞர் அடிகளாசிரியர், புலவர் இறைக்குருவனார், பத்திரிகையாளர் பாபநாசம் குறள்பித்தன், பண்டிதர் ம.கோபாலகிருட்டிணன் ஆகியோரின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

ஏழு தமிழறிஞர்களின் மரபு உரிமையாளர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 35 லட்சம் ரூபாய் பரிவுத்தொகை வழங்கப்பட உள்ளது. முதல்வரிடம் பரிவுத்தொகையை பெறுவதற்காக வந்து போகும் பயணச்செலவையும் தமிழக அரசே ஏற்றுகொள்கிறது.

தலைப்புச்செய்திகள்