Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நானும், ஸ்டாலினும் ஒன்னாதான் எம்.எல்.ஏ ஆனோம்: எடப்பாடியார்

நவம்பர் 29, 2019 07:40

சென்னை: அதிமுக ஆட்சி கலைய வேண்டும் என பலரும் அழுத்தம் கொடுத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது, ஆட்சியை கலைக்க பலர் முயற்சித்ததாகவும், தன்னால் ஆட்சியை வழிநடத்த முடியாது என தப்பு கணக்கு போட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் தானும், ஸ்டாலினும் 1989ல் ஒன்றாகவே எம்.எல்.ஏவாக ஆனதாகவும், ஆனால் அவர் குடும்ப அரசியல் பின்புலத்திலிருந்து பல்வேறு பதவிகளை பெற்றதாகவும், தான் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று முதலமைச்சர் ஆகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்