Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உயர் ரக இருசக்கர வாகனங்களை திருடி வந்த பட்டதாரி இளைஞர்கள்

நவம்பர் 29, 2019 07:50

கோவை: கோவையில் உயர் ரக இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடிய பட்டதாரி இளைஞர்கள் ஐந்து பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கோவையில் பல்வேறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயர் ரக இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வந்தது. இதையடுத்து அந்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதனிடையே ரோந்து பணியில் இருந்தபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவர்கள் தண்ணீர் கேன் வினியோகம் செய்வது போல நோட்டமிட்டு, இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை விற்று அதன் மூலம் அவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து 10  உயர் ரக இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்