Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரியங்கா ரெட்டி கொலை: கைதான 4 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

நவம்பர் 30, 2019 11:54

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டனர். ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26). இவர் வழக்கமாக தனது இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு அங்கிருந்து பேருந்தில் தான் பணியாற்றும் கொல்லத்துக்கு சென்று வந்தார். 

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அவரை காணவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பிரியங்கா ரெட்டியை தினமும் நோட்டமிட்ட 2 டிரைவர்கள் உள்பட 4 பேர் செவ்வாய்க்கிழமை அவரது வாகனத்தை வேண்டுமென்றே பஞ்சர் செய்துவிட்டனர். 

பின்னர் பஞ்சரான வாகனத்தை தள்ளிக் கொண்டு சென்ற பிரியங்காவுக்கு உதவுவது போல் நடித்த அந்த கும்பல் அவரை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தது. இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து டிரைவர் முகமது பாஷா உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் 4 பேரையும் 14 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்