Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து 81 மாணவர்களுக்கு விநியோகம் செய்த அரசுப் பள்ளி

நவம்பர் 30, 2019 02:49

உத்தர பிரதேசம்: ஒரு லிட்டர் பாலை அதிக அளவு தண்ணீரில் கலந்து 81 அரசு பள்ளி மாணவர்களுக்குக் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. கடந்த புதன்கிழமையன்று உத்தர பிரதேசத்தில் சோன்பாத்ரா மாவட்ட சலைய் பான்வா அரசு தொடக்கப் பள்ளியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று மிக வைரலாக பகிரப்பட்டது.

பெரியதொரு அலுமினிய பாத்திரத்தில் அதிக அளவு தண்ணீரைச் சூடாக்கும் சமைக்கும் பெண்ணொருவர், அதில் ஒரு லிட்டர் பாலை கலந்து பாதி குவளை அளவு பாலை ஒவ்வொரு மாணவர்களுக்கும் வழங்குவது இந்த வீடியோவில் தெரிகிறது,

மதிய உணவின்போது தண்ணீரில் பாலை கலந்து கொடுக்கும் இந்த வீடியோ வைரலாக பரவிய பின்மா வட்ட அதிகாரிகள் இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசு ஆணையிட்டுள்ளபடி புதன்கிழமை மதிய உணவில் சோறும், பாலும் வழங்கப்பட மாணவர்களுக்கு வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் 150 மில்லிலிட்டர் பால் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள ஷிக்ஷா மித்ரா ஆசிரியை மீது இந்தியக் குற்றவியல் பிரிவு 408-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்