Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாதரணமாகதான் ஸ்டாலினை வாழ்த்தினேன்: அரசக்குமார்

டிசம்பர் 02, 2019 10:11

புதுக்கோட்டை: ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என பாஜக நிர்வாகி அரசக்குமார் கூறிய நிலையில், அது சாதாரணமாக வாழ்த்தியதுதான் என அவரே விளக்கமளித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பிரமுகர் ஒருவர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசக்குமார் ”எம்.ஜி.ஆருக்கு பிறகு நான் ரசிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகி இருக்க முடியும். காலம் வரும்போது கட்டாயமாக ஸ்டாலின் முதல்வராவார்” என பேசியிருந்தார்.

அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்கட்சி தலைவரை அரசக்குமார் பாராட்டி பேசியது பாஜகவினரிடம் அதிருபதியை ஏற்படுத்தியது. அரசக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் மத்திய தலைமைக்கு புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விளக்கம் அளித்துள்ள அரசக்குமார் ”என் தனிப்பட்ட கருத்துகளைதான் நான் கூறினேன். ஸ்டாலினை சாதரணமாகதான் வாழ்த்தினேன். எனினும் இதுகுறித்து தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதை ஏற்க தயார்” என்று கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்