Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாக்யராஜுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஆண்கள் பாதுகாப்பு சங்கம்

டிசம்பர் 02, 2019 11:13

சென்னை: பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் இயக்குனர் கே.பாக்யராஜ்க்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் இறங்கியுள்ளது. கருத்துக்களை பதிவு செய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பாக்யராஜ், பொள்ளாச்சி பாலியல் கொடூரம் பற்றி சில வார்த்தைகளை குறிப்பிட்டார். அதாவது ஊசி இடங்கொடுக்காமல் நூலால் நுழைய முடியாது, இது போன்ற சம்பவங்களில் பெண்கள் மீதும் தவறு இருக்கிறது என அவர் பேசியது சர்ச்சையில் சிக்கியது

இந்த விவகாரம் தொடர்பாக பெண்கள் அமைப்புகள் சில பாக்யராஜுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தின. பாக்யராஜ் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக மகளிர் ஆணையம் பாக்யராஜ்க்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக பாக்யராஜும் தன் பக்க விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் பாக்யராஜ்க்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் குரல் கொடுத்துள்ளது. இதுகுறித்து அச்சங்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

அதில், " பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது என்று மனதில் பட்டதை பேசுவதோடு நில்லாமல் சமுதாய நலன் சார்ந்து பெண்களை சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது. மிகவும் பாராட்டத்தக்கது. மட்டுமல்லாமல் துணிச்சலான கருத்தும் ஆகும். தொடர்ந்து நீங்கள் இந்திய கலாசாரத்தை சிதைக்கின்ற வகையிலும் பால்மனம் மாறா குழந்தைகளின் கொடூர கொலைகளுக்கு காரணமாக இருக்கும் பெண்களை பற்றிய உங்கள் கருத்துகளை பதிவிட்டு சமுதாய சீர்திருத்தத்தினை ஏற்படுத்த வேண்டும்.

பெண்களைப் பற்றி பேசினாலே ஏதாவது வடிவில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என பலரும் ஓடி ஒதுங்கிக் கொள்ளும் இந்தச் சூழலில் தங்களின் துணிச்சலான சமுதாய நலன் சார்ந்த கருத்துகளை ஆண்கள் பாதுகாப்பு சங்கம் பாராட்டுகிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்