Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குஜராத்தை தொடர்ந்து தெலுங்கானாவில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்

ஜனவரி 16, 2019 09:54

ஐதராபாத்: பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. 

இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்தார். பா.ஜனதா ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் இந்த இட ஒதுக்கீடு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தெலுங்கானா மாநிலத்தில் இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக தெலுங்கானா மாநில முதல்-மந்திரி அலுவலக அதிகாரி கூறியதாவது:- 

மத்திய அரசின் அறிவிப்பின்படி தெலுங்கானா மாநிலத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்த முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்

தலைப்புச்செய்திகள்