Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேலம்: போலி டாக்டர் வீட்டிற்கு சீல்

டிசம்பர் 03, 2019 11:08

ஆத்தூர் ; சேலம் மாவட்டம், கெங்கவல்லி, பகுதியை சேர்ந்த, கூலித்தொழிலாளி குருநாதன் மகள் சுவேதா(16). இவர், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த, 25ல், காய்ச்சல் ஏற்பட்டதால், நடுவலூரில் உள்ள வீட்டுடன் இணைந்த, தனியார் மெடிக்கலுக்கு மாணவியை அழைத்து சென்று, இரண்டு ஊசி போட்டுள்ளனர். இதில், மாணவியின் இடுப்பில் வீக்கம் ஏற்பட்டு சீல் பிடித்துள்ளது. அதன்பின், காய்ச்சல் தீவிரமடைந்ததால், 28ல், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

டிச.,1ல் மாணவி உயிரிழந்தார். தனியார் மெடிக்கலில் ஊசி போட்டதில், மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில், மாணவிக்கு, நடுவலூரை சேர்ந்த ஜெயபால், 36, என்பவர் தடுப்பு ஊசி போட்டு சிகிச்சை பார்த்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் போலி டாக்டர் என்பதும் தெரியவந்ததால் இன்று(டிச.,03) மருத்துவ குழு ஆய்வு செய்து வருவாய்த்துறையினர் அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர். தலைமறைவான போலி மருத்துவரை, கெங்கவல்லி போலீசார் தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்