Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் சுவர் இடிந்து விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார் முதல்வர் பழனிசாமி

டிசம்பர் 03, 2019 12:02

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், நடூர் கிராமத்தில் 3 வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததில் குரு, ராம்நாத், ஆனந்த்குமார், ஹரிசுதா, சிவகாமி, ஓவியம்மாள், நதியா, வைதேகி, திலகவதி, அருக்காணி, ருக்மணி, நிவேதா, சின்னம்மாள் மற்றும் சிறுமி அக்ஷயா, சிறுவன் லோகுராம் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்

இதற்கிடையே, கோவையில் பலத்த மழை காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தார்.

இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் மழையின் காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்ட இடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும்,இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.உயிரிழந்த
குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு வேலை வழங்கப்படும். மேலும் வீடும் கட்டி தரப்படும் என்றார். அப்போது துணை முதல்வர்     ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலர் உடனிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்