Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை எச்சரிக்கை

டிசம்பர் 04, 2019 08:06

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் இன்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதையடுத்து கும்பகோணம், நன்னிலம் பகுதிகளில் 3 செ.மீ மழை பெய்துள்ளது. குடவாசல், ஆலங்குடி, செய்யூர், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளிலும் 2 செ.மீ, அம்பாசமுத்திரம், குன்னூர், தாம்பரத்தில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

சூறாவளிக் காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் குமரிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

அடுத்த 5 நாட்களுக்கு எந்தவொரு பகுதியிலும் அதிக மழைக்கு வாய்ப்பில்லை. தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்