Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரையில் ஜெயலலிதா சிலை திறப்பு

டிசம்பர் 05, 2019 08:40

மதுரை, டிச.6: மதுரையில் கே.கே.நகர் பெரியார் வளைவு அருகில் ரகசியமாக அமைக்கப்பட்டு வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை திறக்கப்பட்டது. நேற்று ஜெயலலிதா நினைவு நாள் என்பதால் அதிமுக தொண்டர்கள் புதிதாக திறக்கப்பட்ட சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள், மற்ற சமூக அமைப்பு தலைவர்களின் சிலைகளை அனுமதியில்லாமல் புதிதாக பொது இடங்களில் நிறுவக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு உள்ளது. அதனால், தற்போது பொதுஇடங்களில் தலைவர்கள் சிலைகள் வைப்பதற்கு அரசு அனுமதி வழங்குவது இல்லை.

அதனாலேயே, இதுவரை பொதுஇடங்களில் கருணாநிதி சிலை வைக்க திமுகவினர் ஆர்வம்காட்டவில்லை. ஆனால், மதுரை கே.கே.நகர் ரவுண்டானாவில் ஏற்கணவே உள்ள எம்ஜிஆர் சிலை இருந்த இடத்திலே ரகசியமா ஜெயலலிதா சிலை அமைக்கப்பட்டு அது தற்போது திறந்துவைக்கப்பட்டும் உள்ளது.

முன்னதாக இந்த சிலையை மதுரையைச் சேர்ந்த அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்துவைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய தினம் திமுக சார்பில் சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர் மற்றும் மாநகராட்சி துணை ஆணையர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், சிலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தகடுகள் நேற்றிரவே அகற்றப்பட்டன. இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் என்பதால் அதனையொட்டி அதிமுகவினர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தலைப்புச்செய்திகள்