Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தருமபுரம் ஆதினத்திற்கு வணிகர்கள் அஞ்சலி

டிசம்பர் 05, 2019 11:40

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், 93. நேற்று ஸித்தி அடைந்தார். இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது.நாகை மாவட்டம், மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில், பழமை வாய்ந்த சைவ ஆதினம் அமைந்துள்ளது.

26வது ஆதினம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். கடலூர் மாவட்டம், சிறுகாட்டூரில் 1926ல் பிறந்த இவர் விருத்தாசலம் தேவார பாடசாலையில் படித்தார். தருமபுரத்தில் வித்வான் பட்டம் பெற்றார்.

1971ல் தருமபுர ஆதினத்தின் 26வது மடாதிபதியாக பதவியேற்று 49 ஆண்டுகள் இருந்தார்.வயது மூப்பு காரணமாக, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, 2ம் தேதி, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று பகல் 3.௦௦ மணியளவில் ஸித்தி அடைந்தார். நேற்று மாலை 5:40 மணிக்கு தருமபுரம் ஆதினத்திற்கு கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு பூஜைகள் செய்து பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று மாலை 4:௦௦ மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடக்கிறது.

குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சீர்காழியில் 1500 கடைகள் அடைக்கப்பட்டு வணிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தலைப்புச்செய்திகள்