Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பேச்சே கிடையாது, என்கவுன்டர் தான்: சீமான்

டிசம்பர் 07, 2019 08:22

சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெலங்கானா என்கவுண்ட்டரை ஆதரித்து ஆவேசமாக பேசியுள்ளார். 
 
சென்னை ஆர். ஏ. புரத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட சீமான் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
 
தண்டனை வழங்காமல் குற்றச் செயல்கள் குறையாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும், தெலங்கானா என்கவுன்ட்டரை போலவேதான் தீர்புகள் வழங்குவோம். குறிப்பாக தெலங்கானா என்கவுன்ட்டரை நான் வரவேற்கிறேன்.
 
இன்றைய சூழலில் 6 வயதுக் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்கிறார்கள் என்றால், அவரை தண்டிக்காமல் சிறையில் அடைப்பது மிகப் பெரிய குற்றமாகும் எனக் கூறினார்.

தலைப்புச்செய்திகள்