Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள்: ராகுல்காந்தி வேதனை

டிசம்பர் 07, 2019 11:10

திருவனந்தபுரம்: நாட்டை வழிநடத்துபவர் வன்முறையை நம்புவதால் பொதுமக்களும் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் பல இடங்களில் சட்டம் ஒழுங்ழு பாதிக்கப்பட்டுள்ளதாக கேரளாவில் பேசிய ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். சிறுபான்மையினர், தலித்துக்கள் மீது வெறுப்பு உணர்வு பரப்பப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், பழங்குடியினர் நிலங்கள் பறிக்கப்பட்டு துரத்தப்படுவதாக ராகுல் தெரிவித்தார். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடப்பதாக ராகுல்காந்தி வேதனையுடன் தெரிவித்தார்.  

உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்தாண்டு 5 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், ஜாமீனில் வந்த 2 பேரும், அவர்களின் கூட்டாளிகளும் அந்த பெண்ணை வழமறித்து தாக்கி தீ வைத்து விட்டு தப்பினர். இதில், அப்பெண் 90 சதவீத தீக்காயம் அடைந்தார். அவர் மீட்கப்பட்டு, உடனடியாக டெல்லிக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். காயமடைந்த இளம்பெண், டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே உள்ள செம்ஷாபாத்தை சேர்ந்தவர் கால்நடை பெண் டாக்டர் டிஷாவை கடத்திச்சென்று வாயில் வலுக்கட்டாயமாக மது ஊற்றி பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்தனர். எரித்துக்கொன்ற வழக்கில் கைதான குற்றவாளிகள் 4 பேர் நேற்று அதிகாலையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றபோது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்