Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுகாதாரத்துறை விரைவில் சர்வதேச தரம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

டிசம்பர் 08, 2019 07:56

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்திய £ளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "வளர்ந்த நாடுகளுக்கு இணையாகச் சர்வதேச தரத்திற்கு நமது சுகாதாரத்துறையை  உயர்த்துவதற்காக, உலக வங்கியானது ரூ.2,900 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

நமது சுகாதாரத் துறையை உயர்த்த உலக வங்கியின் உதவியோடு ரூ 2,900 கோடிக்கான நான்குமுனை திட்டங்களை செயல்ப டுத்துவது குறித்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டங்களை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
`உலக வங்கியின் ரூ. 2,900 கோடி நிதி; விரைவில் சர்வதேச தரம்!’- சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதில், விபத்துக்காய  சிகிச்சை மையங்களை மேம்படுத்தி சர்வதேச தரத்திற்கு உயர்த்துதல், தாய் சேய் நலக் கவனிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள்  செயல்படுத்தப்பட உள்ளன. 

மேலும், ஏற்கெனவே உள்ள சேவைகளைச் சீரமைத்து சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும். தமிழக சுகாதாரத்துறையானது தொடர் ந்து பல்வேறு மகத்தான சாதனைகளைச் செய்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறைக்கு, உலக சுகாதார நிறுவனம் 2030 -ல்  நிர்ணயித்த இலக்கை, நாம் 2019 -ம் ஆண்டிலே அடைந்து இருக்கிறோம்" என்றார்.
 

தலைப்புச்செய்திகள்