Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டில்லி தொழிற்சாலையில் பயங்கர தீ: 43 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் காயம்

டிசம்பர் 08, 2019 08:30

புதுடில்லி: டில்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. தீயைணைக்கும் பணியில் வீரர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்னர்.

டில்லியின் ராணி ஜான்சி சாலை, அனாஜ் மார்க்கெட் பகுதியில் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு, அதிகாலை 5.22 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை. இந்த சம்பவத்தில் 43 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 30 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், காலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது. அந்த கட்டடத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியவில்லை. இதனால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

தீவிபத்தில் படுகாயமடைந்து, டில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மற்ற சிலர் காயங்களுடன், ஆர்எம்எல் மருத்துவமனை மற்றும் ஹிந்து ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிபத்தில் மீட்கப்பட்டவர்கள் புகையை சுவாசித்ததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்