Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண் குழந்தை கண்டிப்பாக வேண்டும்: சுனில் பாரல்லா

டிசம்பர் 09, 2019 07:48

லக்னோ: இந்துக்கள் குடும்பத்தில் குறைந்தது மூன்று குழந்தைகள் வேண்டும். அதில் ஒன்று பெண்  குழந்தை கண்டிப்பாக இருக்க வேண்டும் என உ.பி.,அமைச்சர் சுனில் பாரல்லா கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: நம்முடைய சட்டம் நாம் இருவர் ,நமக்கு இருவர் என இரண்டு குழந்தைகள்  இருப்பதற்கு மட்டும் கோருகிறது. ஆனால் தற்போது இந்துக்கள் குடும்பத்தில் பெரும்பாலனவற்றில் குழ ந்தைகளின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்து விட்டது.

இனிமேல் நாம் நாங்கள் ஐந்து என்ற கொள்கையை ஏற்க வேண்டும். இதன் அர்த்தம் ஒரு குடும்பத்தில் தாய்  தந்தை மற்றும் மூன்று குழந்தைகள் என ஐந்தாக நாம் ஐவர் என கூற வேண்டும். குறைந்த பட்சம் மூன்று  குழந்தைகளில் ஒன்று கட்டாயம் பெண்ணாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் உறவு முறைகள் தெரிய  வரும் . ஒரு குழந்தை மட்டும் இருக்கும் பட்சத்தில் அத்தை பாட்டி போன்ற உறவு முறை குறித்து எப்படி  தெரிய வரும் . இது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். என கூறினார்.

முன்னதாக ஆந்திராவில் நடத்தப்பட்ட என் கவுன்டர் குறித்து கேட்டதற்கு போலீசார் தங்கள் தற்காப்புக்காக  அவர்களை கொன்றதில் தவறில்லை.மேலும் உன்னாவ் சம்பவத்தில் குற்றவாளிகளை அரசு எளிதில் விடாது  என அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்