Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் 14-ந்தேதி காங்கிரஸ் பேரணி: சஞ்சய்தத்

டிசம்பர் 09, 2019 10:37

திருச்சி, டிச.10: விலைவாசி உயர்வை கண்டித்து டெல்லியில் வருகிற 14-ந்தேதி சோனியா காந்தி தலைமையில்  பேரணி நடைபெற இருப்பதாக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத் கூறினார். இதுகுறித்து மேலும்  அவர் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியில்  உள்ளது. இந்திய பொருளாதாரம் கடலில் மூழ்கும் கப்பலை போல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த கப்பலின் கேப்டனாக மோடி இருக்கிறார். 

பெட்ரோல் டீசல் விலை எல்லா நாடுகளிலும் குறைந்து கொண்டிருக்கும்போது இந்தியாவில் மட்டும் உயர்ந்து  கொண்டே செல்கிறது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் மீது வரிக்கு மேல் வரி போடுவது தான். வெங்காயம்  உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. விலைவாசி உயர்வு ஏழை மக்களின்  முதுகெலும்பை உடைப்பதாக உள்ளது.

பொருளாதார வீழ்ச்சியையும் விலைவாசி உயர்வையும் கண்டித்து இந்தியா முழுவதும் அனைத்து மாவட்ட  தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதன் தெ £டர்ச்சியாக டெல்லியில் வருகிற 14-ந்தேதி சோனியா காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற  உள்ளது. இந்த பேரணியில் ராகுல்காந்தியும் பங்கேற்பார். இந்த பேரணி மோடி அரசை ஆட்டம் காண வைக்கும்.

2 கோடி பேருக்கு வேலை தருவேன் என்று மோடி வாக்குறுதி அளித்தார். பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைஇ  ஜி.எஸ்.டி. வரியால் பல சிறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு 40 லட்சம் பேர் வேலை இழந்து தவிக்கிறார்கள். வெளிநாட்டு முதலீடுகள் கொண்டு வரப்படவில்லை.வருவாய் இழப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் மக்கள் நல திட்டங்களை கூட நிைறவேற்ற முடியாமல் மத்திய அரசு தவித்துக்கொண்டிருக்கிறது.

பொருளாதார தேக்கத்தில் உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 102 -வது இடத்திற்கு சென்று  விட்டது என  அவர் கூறினார். பேட்டியின்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ், மாவட்ட தலைவர்கள் கோவி ந்தராஜ் திருச்சி கலை உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தலைப்புச்செய்திகள்