Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தங்க பட்டறையில 147 பவுன் நகை திருட்டு: 7 பேர் கைவரிசை

டிசம்பர் 09, 2019 11:32

மதுரை: மதுரையில் உள்ள தங்கப் பட்டறையில் 147 பவுன் நகைகளை திருடிச் சென்ற 7 பேரை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மேஸ்திரி வீதியைச் சேர்ந்தவர் கலாம் இவருக்கு வயது 30. இவர், மதுரை தெற்கு வாசல் சின்னக்கடை பகுதியில் சொந்தமாக தங்க பட்டறை நடத்தி வருகிறார்.

இவரிடம் கழிவு நகை துகள்கள் எடுப்பதற்கு ஒப்பந்தம் செய்வதற்காக ஏழுபேர் இவரது தங்க நகை பட்டறைக்கு வந்துள்ளனர். 
பட்டறையில் நகை செய்யும்போது சிதறும் தங்கத் துகள்களை எடுத்துக் கொண்டு ஆண்டிற்கு 42 லட்சம் தருவதாக கடை உரிமையாளரிடம் கூறியுள்ளனர். பின்பு இந்த ஒப்பந்தத்தின் முடிவில் 2 லட்சம் பணமும் கலாமிடம் கொடுத்துள்ளனர். 

மீண்டும் நகை பட்டறைக்கு பழைய தங்கத்தை விற்பனை செய்துவிட்டு புதிய தங்கம் வாங்குவது போல பட்டறைக்கு வந்துள்ளனர் மும்பையை சேர்ந்த அஸ்ஸாம் ஷேக், அசுதோஷ், ஆசிஸ், தீபக், இப்ராஹிம், காஜி ஆகியோர். அப்போது கொண்டு வந்த தங்கத்தை சோதனை செய்து கொண்டு இருக்கும் போது பட்டறையில் உள்ள கல்லாவில் வைத்திருந்த சுமார் 147 சவரன் தங்க நகை விலை திருடிச் சென்றதாக நகை பட்டறை உரிமையாளர் சலாம் தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்தப் புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தங்கத்தை விற்பனை செய்வது போல வந்து சுமார் 147 பவுன் நகையை நூதன முறையில் கொள்ளையடித்துச் சென்ற ஏழு பேரையும் தெற்குவாசல் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்