Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

டிசம்பர் 10, 2019 07:49

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கவுன்சிலர்கள் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொதுநல மனு தாக்கல் செய்தார். ‘மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என அரசியல் சாசனம் கூறவில்லை. இந்த சட்டம் அரசியல் அமைப்புக்கு எதிரானது. எனவே மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்’ என திருமாவளவன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மறைமுகத் தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்ட விரோதமானது அல்ல எனக் கூறி திருமாவளவனின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

‘மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடையில்லை. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், தேவைப்பட்டால் மனுதாரர் அங்கு செல்லலாம்’ என நீதிபதிகள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்