Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

முதல் அமைச்சர்தான் நடவடிக்கை எடுப்பார்: செங்கோட்டையன்

மார்ச் 04, 2019 06:53

கோபி: போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது உள்ள வழக்கு குறித்து முதல் அமைச்சர்தான் நடவடிக்கை எடுப்பார் என்று செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. 

அரசு பள்ளியில் எல்.கே.ஜி, யூ.கே.ஜி வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது. 1 லட்சத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு வண்ண சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளது. இது மாணவ-மாணவிகளை மட்டுமல்ல பெற்றோர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. 

பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்தவர்களுக்கு மொத்தம் 15 லட்சத்து 14 ஆயிரம் பேர்களுக்கு விலையில்லா மடிகணிணி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது நிருபர்கள் போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மீது உள்ள வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளதே..? என்று கேட்டபோது, "இந்த வழக்கு உள்துறை பொறுப்பில் உள்ளது. இது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுப்பார்'' என்று கூறினார். 

தலைப்புச்செய்திகள்