Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நிர்பயா வழக்குக் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?

டிசம்பர் 10, 2019 08:42

புதுடெல்லி: நாட்டை உலுக்கிய நிர்பயா பாலியல் பலாத்கார வழக்குக் குற்றவாளிகள் திடீரென திஹார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

குற்றவாளி பவன் குமார் குப்தா, இவர் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் திஹார் சிறை எண் 2க்கு மாற்றப்பட்டுள்ளார். மற்ற குற்றவாளிகளான முகேஷ் சிங், வினய் ஷர்மா, அக்‌ஷய் ஆகியோர் திஹார் சிறையில் இருக்கின்றனர்.

இது தொடர்பாக சிறை அதிகாரி கூறும்போது, நான்கு குற்றவாளிகளும் கடும் பாதுகாப்பில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர், நால்வரும் தனித்தனி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்ற சிறைக்கைதிகளால் இவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் இவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

இதற்கிடையே இன்னொரு அதிகாரி சிறை எண் 3-ல் 16 அறைகள் இருப்பதாகவும், பொதுவாக கருணை மனு நிராகரிக்கப்பட்ட கைதிகள் இந்த சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

“இந்த சிறை எண் 3-ற்கு பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டு சிறையில் ஏதேனும் சிவில் பணிகள் தேவைப்படுகிறதா என்பதை கணிப்பார். தூக்கிலிடப்படுவது என்றால் புக்சார் சிறையிலிருந்து தூக்குக் கயிறுகள் வரவழைக்கப்படும். திஹாரில் தூக்கிலிடும் ஊழியர் திஹாரில் இல்லாததால் மற்ற சிறைகளிலிருந்து தூக்கிலிடும் ஊழியர் வரவைக்கப்படுவார்கள்” என்று மேலும் தெரிவித்தார் அந்த திஹார் சிறை அதிகாரி.

இதனையடுத்து நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்