Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாட்டில் ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்?

டிசம்பர் 10, 2019 10:20

சென்னை: தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெங்காய விலை கிலோவுக்கு 200 ருபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட வருகிறது. தமிழக சந்தைகளில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படும்.

ஆனால் அங்கு மழை காரணமாக விளைச்சல் முடங்கியுள்ளதால் வெங்காய வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் கடும் விலை உயர்வால் இங்குள்ள விற்பனையாளர்களும் குறைந்த அளவே வெங்காயத்தை கொள்முதல் செய்கின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகாவிலிருந்து கடலூர் மாவட்ட பான்பூரி சந்தைக்கு வெங்காயம் வழக்கமான விலையில் இறக்குமதியாகியுள்ளது. இதனால் அங்கு ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த செய்தியை அறிந்த பிறகு உள்ளூர் மக்கள் உட்பட வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் பான்பூரி சந்தைக்கு படையெடுத்துள்ளனர். கடந்த நாட்களாகவே அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காய விலை மூன்று மடங்கு வரை குறைந்துள்ளதால் சந்தையில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இதையடுத்து தமிழகத்தில் அடுத்தடுத்த மாவட்டங்களில் வெங்காய விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளதாவது, மத்திய தொகுப்பிலிருந்து 500 டன் வெங்காயம் தமிழகத்திற்கு முதற்கட்டமாக கொண்டு வரப்படவுள்ளது. அவைகள் உடனடியாக பசுமை பண்ணை கடைகளில் விற்பனை செய்யப்படும் என இவ்வாறு கூறினார்.

தலைப்புச்செய்திகள்