Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வெங்காயம் விலை அதிரடியாக குறைந்தது

டிசம்பர் 11, 2019 12:41

வேலூர்: வேலூர் நேதாஜி காய்கறி மார்க்கெட்டுக்கு மகராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 80 டன் வரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்காயம் விற்பனைக்கு வந்தது.

சில வாரங்களாக 20 டன் அளவில்தான் விற்பனைக்கு வந்தது. இதன் காரணமாக 1 கிலோ ரூ.200 வரை விற்பனையாகி அனைத்து தரப்பு மக்களையும் சிரமத்துக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் நேதாஜி மார்க்கெட் லாங்கு பஜாரில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு இன்ஸ்பெக்டர் செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் தலைமையில் நேற்று காலை ஆய்வு செய்தனர்.

வெங்காயம் வரத்து மற்றும் விலை நிர்ணயம் குறித்து அவர்கள் கேட்டறிந்தனர். இதனை தொடர்ந்து வேலூர் மார்க்கெட்டில் வெங்காயம் விலை கணிசமாக குறைந்துள்ளது.

நேற்று காலை வெங்காய மூட்டை மேலும் ரூ.1500 முதல் ரூ.2500 வரை குறைந்தது. முதல் தரம் மூட்டை ரூ.6 ஆயிரத்துக்கும், நடுத்தரம் ரூ.5 ஆயிரத்துக்கும் விற்பனையானது.இதனால் 1 கிலோ வெங்காயம் தரம் அடிப்படையில் ரூ.100, ரூ.120, ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

இன்று மார்க்கெட்டுக்கு வெங்காயம் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் 50 கிலோ மூட்டை ரூ.3,600 வரை விற்பனையானது. இந்த விலை குறைவால் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.50 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

தலைப்புச்செய்திகள்