Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நல்லவேளையாக அமித்ஷா நீதிபதியல்ல: கபில்சிபல்

டிசம்பர் 13, 2019 07:51

புதுடில்லி : நல்ல வேளையாக அமித்ஷா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இல்லை. இருந்திருந்தால் அரசியலமைப்பின்படி செல்லாத குடியுரிமை சட்டத்தை செல்லும் என உத்தரவு பிறப்பித்திருப்பார் என காங்., தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த மசோதா பற்றி கருத்து தெரிவித்துள்ள கபில் சிபல், குடியுரிமை மசோதா, அரசியல் அமைப்பிற்கு எதிரானது. அந்த சட்ட திருத்த மசோதா செல்லுமா, செல்லாதா என்பதை கோர்ட் முடிவு செய்யட்டும். உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை செல்லும் என கூறினால், நல்ல வேளையாக அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இல்லை. ஒரு வேளை நீதிபதியாக இருந்திருந்தால் செல்லாத இந்த மசோதாவை செல்லும் என கூறி இருப்பார்.

மஹாராஷ்டிராவில் குறைந்தபட்ச பொது திட்டத்தின் அடிப்படையிலேயே சிவசேனாவுடன் கூட்டணி வைத்துள்ளோம். எங்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாங்கள் அவர்களை வற்புறுத்தவில்லை. இந்த மசோதாவை சிவசேனா ஆதரிக்கவில்லை. ஓட்டெடுப்பின் போது ராஜ்யசபாவில் அவர்கள் இல்லை. ஒருவேளை அவர்கள் இருந்திருந்து அதனை எதிர்ப்பதற்கும், வெளிநடப்பு செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

அசாம் தேசிய குடியுரிமை பதிவில் இருந்து இந்துக்கள் அல்லாத 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனை பா.ஜ., புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் இந்த மசோதா கொண்டு வரப்பட்டிருக்காது. அசாம் தேசிய குடியுரிமை பதிவு மற்றும் மசோதா விவகாரத்தில் இவர்களின் நிலைப்பாடு குழப்பமாக உள்ளது. இது தான் இப்போது பிரச்னையாக உள்ளது என்றார்.

தலைப்புச்செய்திகள்