Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அழிந்து வரும் நாட்டு குதிரைகள்: விழிப்புணர்வு ஏற்படுத்த குதிரையில் செல்லும் மாணவர்கள்

டிசம்பர் 13, 2019 12:14

திருச்சி: திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வளநாடு அருகே உள்ள தேனூர் கிராமத்தைச்சேர் ந்தவர் பாலசுப்பிரமணியன் (37). தனியார் வங்கி ஒன்றின் கிராமப்புற வங்கி கிளை மேலாளராக பணியாற்றி  வருகிறார். இவரது மனைவி எழிலரசி. இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.  இயற்கை ஆர்வலரான பாலசுப்பிரமணியன் விலங்குகள் மீதும் அதிக பற்றுக் கொண்டவர்.

வாடிப்பட்டி கிராமத்தில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதுடன்  குதிரைகளையும் இவர் வளர்த்து வருகிறார். அத்துடன் ‘நாட்டு இன குதிரைகளை காப்போம்’ என்ற வாட்ஸ்  அப் குழு ஆரம்பித்து அழிவின் விளிம்பிற்கு செல்லும் நாட்டு இன குதிரைகளை மீட்கும் முயற்சியில் இவர் ஈ டுபட்டுள்ளார். இதற்காக நாட்டு இன குதிரைகளை அனைவரும் வாங்கி வளர்க்கும் வகையில் விழிப்புணர்வை  ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் குத்தகைக்கு எடுத்த நிலத்தின் உரிமையாளர் ஆறுமுகத்தின் மகன்  அழகர்சாமிக்கு அந்த குதிரைகள் மீது ஒரு பற்று வந்தது. வளநாடு அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும்  அவன் பள்ளி நேரம் முடித்து வந்து குதிரைக்கு உணவளிக்கும் பணியை மேற்கொண்டு வந்தான். வளர்ந்து  வரும் நாகரிக உலகில் விதவிதமான வாகனங்கள் அணிவகுக்க அதன் காரணமாக காற்று மாசு ஏற்பட்டு ஆ க்சிஜனை கூட காசுகொடுத்து விலைக்கு வாங்கும் நிலை வந்து விட்டது என்று எண்ணி வருந்திய ப £லசுப்பிரமணியன் தான் வளர்க்கும் குதிரையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிட முடிவு செய்தார்.

அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் சிறுவன் அழகர்சாமியையும் அவனுடைய வீட்டின் அருகில் வசிக்கும்  6-ம் வகுப்பு மாணவன் வேலுவையும் குதிரையில் பள்ளிக்கு செல்ல பாலசுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.  அதன்படி இருவரும் தினமும் குதிரை மீது அமர்ந்து பள்ளிக்கு சென்று வருகிறார்கள்.

தலைப்புச்செய்திகள்