Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கால்களால் மிதித்து தயாரிக்கப்படும் பானிபூரி: திருச்சியில் 6 வீடுகளுக்கு அதிகாரிகள் சீல்

டிசம்பர் 13, 2019 12:15

திருச்சி: திருச்சியில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரித்த 6 வீடுகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.  மேலும் பீமநகரில் சமோசா குடோன் ஒன்றும் மூடப்பட்டது.

திருச்சி மாநகரில் மேலதேவதானம் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை ஒட்டியுள்ள சில வீடுகளில் வடம £நிலத்தை சேர்ந்த சிலர் மொத்தமாக பானிபூரி தயார் செய்து வினியோகிக்கிறார்கள். இந்த பானிபூரி செய்யும்  இடம் சுகாதார சீர்கேடாகவும் விஷ ஜந்துகள் வாழும் இடத்தில் அவை தரமற்றதாக தயாரிக்கப்படுவதாகவும்  திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ராவுக்கு புகார் வந்தது.

இதையடுத்து டாக்டர் சித்ரா தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட 4 பேர் குழு  மேலதேவதானத்தில் பானிபூரி தயாரிக்கும் ஓட்டு வீடுகள் நிறைந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வு  செய்த அதிகாரிகள் அங்கு பானிபூரி தயார் செய்வதை சகிக்க முடியாமல் உடனடியாக 6 ஓட்டு வீடுகளையும்  பூட்டி ‘சீல்’ வைத்தனர். இதேபோல் திருச்சி பீமநகர் கண்டித்தெருவில் ரமேஷ் என்பவர் நடத்தி வந்த சமோசா  உற்பத்தி குடோனும் சுகாதாரமற்ற முறையில் இயங்குவதாக கிடைத்த தகவலின்பேரில் ஆய்வு நடத்தப்பட்டது.  

அப்போது சமோசா தயாரிக்க வைத்திருந்த பொருட்கள் மிகவும் தரமற்றதாக காணப்பட்டது. அங்கு பணிய £ளர்களை கொண்டு சமோசா தயார் செய்து அவை மாநகரில் உள்ள பெரும்பாலான டீக்கடைகளில் வினியோகிக்கப்பட்டு வருவதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சமோசா குடோனும் பூட்டி ‘சீல்’ வை க்கப்பட்டது.

வேறு நல்ல இடத்தை தேர்வு செய்து அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்த பின்னரே சமோசா தயாரிக்க  அனுமதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

தலைப்புச்செய்திகள்