Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

டிசம்பர் 14, 2019 03:46

கவுகாத்தி:  அசாம், திரிபுராவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துகலவரம் ஏற்பட்டது. இதில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது.

வடகிழக்கு மாநிலங்களில் வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவி வந்துள்ள வங்காளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டால் வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். எனவே குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு தொடக்கத்தில் இருந்தே வடகிழக்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
 
இதற்கிடையே, அசாமில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருவதன் எதிரொலியாக அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்