Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரையில் வீட்டை இடித்துத் தள்ளிய கந்துவட்டி கும்பல்

டிசம்பர் 14, 2019 10:09

மதுரை: மதுரை சிங்கம் பிடாரி கோவில் தெருவில் வசித்துவருபவர் கூலித்தொழிலாளி குமார். இவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாகராஜ் என்ற கந்துவட்டிக்காரரிடம் 2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இதற்கு வட்டியாக 5 சதவீதம் பணத்தை ஒவ்வொரு மாதமும் கட்டிவந்துள்ளார்.

வட்டி கட்டி வந்ததால் இவரால் அசலை செலுத்தமுடியவில்லை என்று கூறப்படுகிறது. நாகராஜ் அசல் பணம் வேண்டும் என தொடர்ந்து கூறிவந்துள்ளார். மேலும் பணத்தை திருப்பிக்கொடுக்க முடியவில்லை என்றால் வீட்டை எழுதிக்கொடுக்கும்படி நிர்பந்தித்துள்ளார். ஆனால் குமார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டிலிருந்த குமாரை வேறொரு எண்ணில் இருந்து அழைத்த குமார் தூத்தூக்குடியில் வேலை இருப்பதாக அழைத்துள்ளார். இதை நம்பி குமாரும் தூத்துக்குடி சென்றுள்ளார். அந்த சமயத்தில் குமாரின் மனைவி ரேஷன் கடைக்கு சென்றுவிட வீட்டில் குமாரின் தாயார் மட்டும் தூங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது பத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினரை அழைத்து வந்த நாகராஜ், குமாரின் தாயாரை வெளியேற்றிவிட்டு ஜேசிபி இயந்திரம் கொண்டு வீட்டை இடித்து தரை மட்டமாக்கியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து குமார் செல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்துள்ளனர். பின்னர் குமார் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கந்து வட்டியால் கஷ்டப்படும் மக்களுக்கு கடன் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்