Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

140 சவரன் நகையைத் திருடிய ஹெல்மெட் கொள்ளையன்

டிசம்பர் 15, 2019 09:37

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டோபர். இவர் மார்த்தாண்டம் சந்திப்பில் சிலங்கா என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடையையொட்டி பின் பக்கம் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஜான் கிரிஸ்டோபர் நேற்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டின் கதவை மூடாமல் படுத்துத் தூங்கியிருக்கிறார்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்து அறிந்துகொண்ட கொள்ளையன் ஒருவன் ஹெல்மெட் அணிந்தபடி வீட்டுக்குள் புகுந்தான். பின்னர் வீட்டையொட்டி இருக்கும் நகைக்கடைக்குள் சென்று நகைகளைத் திருடிச் சென்றிருக்கிறான். நகை கொள்ளைபோன சம்பவம் இன்று காலையில்தான் ஜான் கிறிஸ்டோபருக்குத் தெரியவந்தது.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் அங்கு வந்து சி.சி.டி.வி கேமராவை ஆன் செய்து பார்த்தனர். அதில் ஹெல்மெட் அணிந்த ஒருவர் நகைகளைக் கொள்ளையடித்துச் செல்வது பதிவாகியிருந்தது. மேலும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடந்தது. மோப்ப நாய் சிறிதுதூரம் ஓடிச்சென்று நின்றது, யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. நகைக்கடையிலிருந்து 140 சவரன் நகை கொள்ளை போனதாகவும், அதன் மதிப்பு சுமார் 45 லட்சம் ரூபாய் எனவும் கூறப்படுகிறது. மேலும் 60 பவுன் நகைகள் கொள்ளையனிடமிருந்து தப்பியுள்ளது.

இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் கூறுகையில், "நகைக்கடையின் பின்பக்கம் வீட்டின் அறை மற்றும் கழிவறை உள்ளது. கொள்ளையன் அந்த அறைவழியாக எளிதில் நகைக்கடையை அடைந்திருக்கிறான். எனவே இதுகுறித்து நன்கு தெரிந்தவர்கள்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்" என்றனர்.

தலைப்புச்செய்திகள்