Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

5 ஆண்டுகளில் ரூ.1,245 கோடி வருவாய்: இஸ்ரோ

டிசம்பர் 15, 2019 10:00

புதுடில்லி: 26 நாடுகளின் செயற்கைகோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோவிற்கு ரூ.1,245 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங், ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: கடந்த 5 ஆண்டுகளில், 26 நாடுகளின் செயற்கைகோள்களை ஏவியதன் மூலம் இஸ்ரோவிற்கு ரூ. 1,245 கோடி வருமானம் வந்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு நிதி பரிமாற்றம் மூலம் ரூ.91.63 கோடி வருவாய் கிடைக்க உதவியுள்ளது. 2019 நிதியாண்டில், செயற்கைகோள் ஏவுதல் மூலம் ரூ.324.19 கோடியும், 2018 ம் நிதியாண்டில் 232,56 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளில், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், நெதர்லாந்து, ஜப்பான், மலேஷியா, அல்ஜீரியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுடன், வணீக ரீதியாக இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. 319 வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்தியுள்ளது.

தலைப்புச்செய்திகள்