Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

3வது நாளாக மம்தா பேரணி : ஸ்தம்பித்த கொல்கத்தா

டிசம்பர் 18, 2019 09:25

கொல்கத்தா: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, ஒரே வாரத்தில் 3வது நாளாக இன்றும் மம்தா பானர்ஜி பிரம்மாண்ட பேரணி நடத்தி வருகிறார். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் கோல்கத்தா நகரம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஏற்கனவே கடந்த 2 நாட்களாக பேரணி சென்றார். இந்நிலையில் இன்று 3வது முறையாக ஹவுரா மைதானத்தில் இருந்து கோல்கத்தா கடற்கரை வரை பேரணி சென்றார். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதனால் கோல்கத்தா நகர சாலைகளில் போக்குவரத்து மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, நகரமே ஸ்தம்பித்துள்ளது.

பேரணியை துவக்குவதற்கு முன் பேசிய மம்தா, மேற்குவங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவு மற்றும் குடியுரிமை திருத்த மசோதாவை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எங்களை யாரும் இங்கிருந்து வெளியேற சொல்ல முடியாது. அனைத்து மதங்கள், ஜாதிகளுக்கும் சமஉரிமை உண்டு என நாங்கள் நம்புகிறோம். அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள். இவர்களை யாரும் இங்கிருந்து வெளியே அனுப்ப முடியாது என்றார்.

தலைப்புச்செய்திகள்