Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரும்பாக்கம் கல்லூரி பேராசிரியை தற்கொலைக்கு காதல் தோல்வியே காரணம்

டிசம்பர் 19, 2019 10:08

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே உள்ள கரளம்பாக்கத்தை சேர்ந்தவர் ஹரிசாந்தி (32). இவர் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் தெலுங்கு துறையில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பூரில் உள்ள அரசு பள்ளியில் வேலை கிடைத்தவுடன் உதவி பேராசிரியர் பணியை விட்டு விட்டு ஆசிரியர் பணிக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை வைஷ்ணவா கல்லூரியில் முதல் மாடியில் உள்ள தெலுங்கு வகுப்பறையில் மின் விசிறியில் ஹரிசாந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கிடந்தார். அவரது கையும் அறுக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். இதில் காதல் தோல்வியில் ஹரிசாந்தி தற்கொலை செய்திருப்பது தெரிந்தது. அதே கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவருக்கும், ஹரிசாந்திக்கும் கடந்த 2011-15-ம் ஆண்டில் சென்னை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது காதல் மலர்ந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஹரிசாந்தியும் வைஷ்ணவா கல்லூரியில் பணியாற்றியதால் இருவருக்கும் இடையேயான காதல் தொடர்ந்துள்ளது. இதற்கிடையே அந்த பேராசிரியருக்கு கடந்த 2016-ம் ஆண்டு உறவினர் மகளுடன் திருமணம் நடந்து உள்ளது. அவருக்கு தற்போது 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

ஹரிசாந்தியும், ஆசிரியர் வேலை கிடைத்து சென்று விட்டதால் இருவருக்கும் இடையேயான பழக்கம் குறைந்திருந்ததாக தெரிந்தது. ஆனாலும் ஹரிசாந்தி அடிக்கடி கல்லூரிக்கு வந்து காதலனான பேராசிரியரை சந்தித்து பேசி வந்தார். அப்போது அந்த பேராசிரியரிடம் தன்னை 2-வதாக திருமணம் செய்து கொள்ளுமாறு ஹரிசாந்தி கூறியதாக தெரிகிறது. ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இதனால் மனவேதனையில் இருந்த ஹரிசாந்தி நேற்று முன்தினம் மீண்டும் கல்லூரிக்கு சென்று காதலனான பேராசிரியரை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போதும் அவர் ஹரிசாந்தியை திருமணம் செய்ய மறுத்து திட்டவட்டமாக கூறிவிட்டதாக தெரிகிறது. மனவேதனை அடைந்த அரிசாந்தி வகுப்பறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். இது பற்றி பேராசிரியரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்