Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரையில் உள்நாட்டு வெங்காயம் ரூ.100; எகிப்து வெங்காயம் ரூ.130

டிசம்பர் 22, 2019 07:41

மதுரை: மதுரையில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.100-க்கும், இறக்குமதி செய்யப்பட்ட எகிப்து வெங்காயம் ரூ.130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட பிறகும் அவற்றின் விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அன்றாட சமையலுக்குப் பயன்படும் பெரிய, சின்ன வெங்காயத்துக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மழையால் வெங்காயமும் சந்தைகளுக்கு வரவில்லை. அதனால், தமிழகத்தில் சின்ன வெங்காயம் கடந்த மாதம் ரூ.180-க்கும், பெரிய வெங்காயம் ரூ.150-க்கும் விற்றது.

இதன் விலையைக் குறைக்க மத்திய அரசு எகிப்து வெங்காயத்தை இறக்குமதி செய்தது.அதனால் சென்னை, திருச்சி, சேலம், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பிற நகரங்களில் வெங்காயம் விலை குறைந்து வருகிறது.

ஆனால், மதுரையில் மட்டும் பெரிய வெங்காயம் விலை அதிக மாகவே உள்ளது. மாட்டுத் தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் ஒரு கிலோ உள்நாட்டு வெங்காயம் ரூ.90 முதல் ரூ.100-க்கும், எகிப்து வெங்காயம் கிலோ ரூ.130-க்கும் விற்பனையாகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், உள்நாட்டு வெங் காயம் தற்போதுதான் அறுவடை செய்து விற்பனைக்கு வந்துள்ளது. அவை மழைக் காலத்துக்கு சில நாட்களிலே அழுகி விடுகிறது. எகிப்து வெங்காயம், பழைய வெங்காயம் ஆகியவற்றை நீண்ட நாள் வைத்திருந்து சமையலுக்குப் பயன்படுத்தலாம். அதனால், எகிப்து வெங்காயத்துக்கு வர வேற்பு கூடியுள்ளது.

மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகி முருகன் கூறுகையில், ‘‘உள்நாட்டு பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.90. எகிப்து வெங்காயம் கூடுதலாகத்தான் விற்கிறது. உள்நாட்டு வெங்காயம் தற்போது வர ஆரம்பித்துள்ளது. இவை வெளிநாடுகளுக்கு ஏற்றும தியாகாமல் ஒட்டுமொத்தமாக உள்நாட்டு சந்தைகளுக்கு வரு வதால் விலை குறையத் தொடங்கி உள்ளது. ஆனால், எகிப்து வெங்காயம், தரமாக இருப்பதால் உள்நாட்டு வெங்காயத்தைவிட கூடுதலாக விற்பனையாகிறது’’ என்றார்.

தலைப்புச்செய்திகள்