Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மணப்பாறை அருகே கும்மியடித்து தேர்தல் நூதன பிரசாரம்

டிசம்பர் 25, 2019 04:36

மணப்பாறை: மணப்பாறை அருகே பெண்கள் கும்மியடித்து நு}தன தேர்தல் பிரசாரம் செய்தனர். திருச்சி மாவட்டத்தில் வருகிற 27-ந்தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள அந்த நல்லூர்  மணிகண்டனம் மணப்பாறை  மருங்காபுரி மையம்பட்டி திருவெறும்பூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மோதும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்  ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளுக்கு பலமுனை போட்டி நிலவுகிறது. அவர்களை ஆதரித்து முக்கிய அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் கட்சி சின்னங்களுக்கு அப்பாற்பட்டு போட்டியிடும் கிராம ஊராட்சி தலைவர்  வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் தங்களது கிராமங்களில் வித்தியாசமான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாலை முதல் இரவு நேரம் இடைவிடாமல் ஒவ்வொரு கிராமமாக சென்று வாக்குகளை சேகரித்தனர். 

மணப்பாறையை அடுத்த முத்தப்புடையான்பட்டியில் ஆட்டம் பாட்டம்  கொண்டாட்டம் என தேர்தல் பிரசாரம் களை கட்டியது. தப்பாட்டம் காதை பிளக்க கையில் கொடிகளை ஏந்திக் கொண்டு ஒருவர் நடனம் ஆட பெண்கள் கும்மியடித்து தங்களின் நடனத்தை வெளிப்படுத்தினர். இப்படியாக பல்வேறு இடங்களிலும் தேர்தல் பிரசாரம் களை கட்டியது.

தலைப்புச்செய்திகள்