Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 63,079 போலீசார்

டிசம்பர் 26, 2019 06:30

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 63,079 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தாலுகா போலீசார் 33,920 பேரும், ஆயுதப்படை
போலீசார் 9,959 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு காவல்படையை சேர்ந்த 4,700 பேரும், போலீஸ் அல்லாத 14,500 பேரும் பாதுகாப்பு பணியில்
உள்ளனர்.

27 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை வாக்குப்பதிவு
நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்காக 702 தேர்தல் நடத்தும்
அலுவலர்களும், 13 ஆயிரத்து 62 உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8
அலுவலர்கள் வீதம் சுமார் 4 லட்சத்து 2 ஆயிரத்து 195 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவை நேர்மையாகவும்,
ஜனநாயக முறைப்படியும் நடத்துவதற்காக 63,079 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்