Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி பதவியேற்பு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

டிசம்பர் 27, 2019 04:23

சென்னை: ஜார்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதாதள கூட்டணி வெற்றி பெற்றது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து வருகிற 29-ந் தேதி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் சிபு சோரனின் மகன் ஹேமந்த் சோரன் ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார்.

ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று மு.க.ஸ்டாலின் அந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.

தலைப்புச்செய்திகள்