Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வானம் நிகழ்த்திய அழகிய சூரிய கிரகணம்: திருச்சி கரு்ர் புதுக்கோட்டையில் பொதுமக்கள் வியப்பு

டிசம்பர் 27, 2019 07:51

திருச்சி: திருச்சி கரூர் புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் வானம் நிகழ்த்திய அழகிய ஜhலத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு வியந்தனர். சூரியனை புவி சுற்றிவரும் பாதையுள்ள தளமும்  நிலவு புவியை சுற்றிவரும் தளமும் ஒன்றுக்கொன்று 5 டிகிரி கோணம் சாய்ந்துள்ளது. நிலவு பூமியை சுற்றிவரும் பாதை பூமி-சூரியன் உள்ள தளத்தை இரண்டு இடங்களில் வெட்டும்.

இந்த புள்ளிகளில் நிலவு அமைந்திருக்கும்போது அமாவாசை மற்றும் முழுநிலவு நாளோ ஏற்பட்டால் முறையே சூரிய கிரகணமும்  சந்திர கிரகணமும் நிகழும். நிலவு சூரியனை விட மிகவும் சிறியது எனினும் அது பூமிக்கு அருகே இருப்பதால் பெரிதாக தோன்றுகிறது.

நெருப்பு வளையம் போன்ற சூரிய கிரகணம்தான் நேற்று திருச்சியில் தெரிந்தது. இந்த கிரகணமானது திருச்சி மட்டுமல்லாது புதுக்கோட்டை கரூர் பெரம்பலு}ர் உள்ளிட்ட மாவட்டங்களில் அற்புதமாக புலப்பட்டது. அபூர்வமாக தோன்றிய கங்கண சூரிய கிரகணத்தை பார்க்க திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள கோளரங்கம் அண்ணா அறிவியல் மையத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருச்சியை பொறுத்தமட்டில் நேற்று முன் தினம் காலை 8.07 மணிக்கு சூரியனை நிலவின் ஒரு பகுதி மெல்ல மெல்ல மறைக்க தொடங்கியது. இந்த அரிய நிகழ்வை காண திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள்   மாணவ-மாணவிகள் அண்ணா அறிவியல் மையத்தில் திரண்டனர். 

சூரியன் மோதிரம்போலவும் பிறை வடிவிலும்  அரை வட்டமாகவும் காட்சி அளித்தது. கரூர் மாவட்டத்தில்  தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டு  சூரிய கிரகணத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில்   சூரிய கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட அறிவியல் இயக்கம் சார்பில்இ கரூர் காந்திகிராமம் விளையாட்டு திடலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதையொட்டி ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் அங்கு கூடினர். கரூர் மாவட்டத்தில் வளைய சூரிய கிரகணம் காலை 8.15 மணிக்கு தொடங்கி  11.15 மணி வரையில் நிகழ்ந்தது. இதில் முழு சூரிய கிரகணம் காலை 9.30 மணியில் இருந்து 9.34 மணி வரை காணப்பட்டது. இதனை அங்கு கூடிநின்ற சிறுவர்-சிறுமிகள்  பொதுமக்கள்இ இளைஞர்கள் பாதுகாப்பு கண்ணாடி மூலம் கண்டு ரசித்தனர். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டு  சூரிய கிரகணத்தை பொதுமக்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. புதுக்கோட்டையில் வளைய சூரிய கிரகணம் காலை 8.07 மணிக்கு தொடங்கி 11.15 வரையில் நிகழ்ந்தது. இதில் முழு சூரிய கிரகணம் காலை 9.30 மணி முதல் 9.35 மணி வரை காணப்பட்டது. 

தலைப்புச்செய்திகள்