Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாது உப்பு சோதனை கருவி அறிமுகம்

டிசம்பர் 29, 2019 07:50

கரூர்: பள்ளிப்பட்டி அரசு மருத்துவமனையில் தாது உப்புகள் கண்டறியும் சோதனைக் கருவி அறிமுக விழா நடைபெற்றது. கரு்ர் மாவட்டம்  அரவக்குறிச்சிக்குட்பட்ட பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இப்பகுதி மக்கள் ரத்தத்தில் உள்ள தாது உப்புகளைக் கண்டறிவதற்கு மாவட்டப்பகுதிகளில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு சென்று வரவேண்டிய நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சாா்பில் பள்ளப்பட்டி மருத்துவமனைக்கு தாது உப்புகளை கண்டறியும் புதிய சோதனை கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் பிரசாந்த் தலைமை வகித்தார். மருத்துவா்கள் செந்தில்நாதன்  ஆா்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட மருந்து வணிகா்கள் நலச்சங்க ஆலோசகா் அபுதாஹிர் கருவியைத் தொடங்கி வைத்தார். இதுகுறித்து டாக்டர்கள்; கூறுகையில்  பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு தாது உப்புகளை கண்டறியும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இரண்டரை லட்சம்.

இந்தக் கருவியினால் ரத்தத்தில் உள்ள தாது உப்புக்களான பொட்டாஷியம் அயோடை இ கால்சியம் குளோரைடு உள்ளிட்டவற்றை துல்லியமாகக் கண்டறிய முடியும். குறிப்பாக 5 நிமிடங்களிலேயே பரிசோதனை முடிவுகளைத் தெளிவாகக் கண்டறிய முடியும்.

சிறுநீரக கோளாறுகள்  டயாலிசிஸ் செய்பவா்கள்  மூட்டு வலி உள்ளவா்கள் கால்சியம் சத்து குறைவாக இருக்கிறதா? என்பதைப் பரிசோதிக்க இந்தக் கருவி பயன்படும். டயாலிசிஸ் யூனிட் உள்ளதால் பள்ளப்பட்டி அரசு மருத்துமனைக்கு இந்தக் கருவி இன்றியமையாத ஒன்றாக உள்ளது என்றனா்.

ஆய்வக நிபுணா்கள் தங்க பாண்டியன் பெனாசிர்  மருந்தாளுநா் ரஜாக்  பள்ளபட்டி மக்கள் ஒருங்கிணைப்பாளா் கூலச்சி ஆசிக் ஆலாஹி  செவிலியா்கள்  பணியாளா்கள்  பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தலைப்புச்செய்திகள்