Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சமுதாய காவல் பணிக்கான பன்முனை பயிற்சி முகாம்

டிசம்பர் 29, 2019 01:48

கோவை: கோவை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற, கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக கோவை இரத்தின சபாபதி புரம் பகுதியில் உள்ள தனியார் உனவக அரங்கில் சமுதாய காவல் பணிக்கான பன்முனை பயிற்சி முகாம் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து பயிற்சி மாணவர்களுக்கு காவல்துறையின் நன்பண்புகள், மற்றும், காவல்துறையின் தியாகங்கள் பற்றி அனைவருக்கும் எடுத்து உரைத்தார். மேலும் கடந்த சில நாட்களாக காவல்துறையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணியாற்றி வருகின்ற ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்களின் சேவையினால் பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து உள்ளதாக தெரிவித்தார். 

மேலும் குற்ற சம்பவங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் தகவல் தர இன்றளவும் தயக்கம் காட்டுகிற கிராமபுற மக்கள் அதிக அளவில் நமது கோவையிலும் இருப்பதாகவும், அப்படிபட்ட சூழலில் காவல்துறைக்கு மிகுந்த உதவியாக செயல்படுவது ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் தான் ஏனெனில் அவர்கள் மட்டும் தான் காவலர்களுக்கு காவலர்களாகவும், பொதுமக்களிடத்தில் பொதுமக்களாகவும் செயல்படுகின்றனர்.

அவர்களின் இத்தகைய செல்களை காவல்துறை சார்பிலும், அனைத்து காவலர்கள் சார்பிலும் பாராட்டத்தக்கது என பெருமை பட பேசினார். இதனை தொடந்த்து வருடத்தில் 365நாட்களில் 300 நாட்களுக்கும் மேலாக காவல் பணியில் தன்னை ஈடுபடுத்தி காவல்துறைக்கு உதவிகள் புரிந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், மற்றும் கேடயங்கள் வழங்கி கெளரவ படுத்த பட்டது. 

இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்களுக்கு இந்த சான்றிதழ்களை கோவை மாவட்ட துணை ஆணையாளர் பாலாஜி சரவணன் வழங்கி சிறப்பு செய்தார். இந்த நிகழ்ச்சியில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் செந்தில் குமார், சிந்தனை கவிஞர் என்றழைக்கப்படும் கவிதாசன், டாக்டர் மோனி, டாக்டர் தினேஷ் பெரியசாமி, மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியாளர் விநாயகமூர்த்தி மற்றும் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்