Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

டிசம்பர் 30, 2019 07:42

சென்னை: மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இன்று முடிவதால், விண்ணப்ப அவகாசம் மேலும் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) அடுத்த ஆண்டு மே 3-ம் தேதி நடைபெறுகிறது. பிளஸ் 2 தேர்வெழுதிய மற்றும் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்தத் தேர்வை எழுதலாம்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. மே 3, 2020-ல் மதியம் 2 மணி முதல் 5 மணிவரை 3 மணிநேரம் தேர்வு நடைபெறும். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் மட்டும் தேர்வு நடைபெறும்.
அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், மத்திய, மாநில அரசுகளின் இட ஒதுக்கீடுகள், தனியார் பல்கலைக்கழகங்களில் மருத்துவத்துக்கான சீட் பெறலாம்.

தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, கடந்த 2-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று நள்ளிரவு 11:59 மணியுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவு பெறுகிறது. ஏராளமான தகவல்கள், தொழில்நுட்பக் கோளாறுகள் ஆகியவற்றால் மாணவர்கள் விண்ணப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே நீட் தேர்வு பதிவுக்கான அவகாசம் இதுவரை நீட்டிக்கப்படாத நிலையில், இனியாவது நீட்டிக்கப்படுமா என்று பெற்றோர், மாணவர் பெற்றோர் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்