Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோலம் போட்ட பெண்ணுக்கு பாக்., அமைப்புடன் தொடர்பு

ஜனவரி 02, 2020 01:19

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை பெசன்ட் நகரில், அடுத்தவர்கள் வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்களில் ஒருவர், பாக்., அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக, போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டிச.,29ல் சென்னை பெசன்ட் நகரில், கோலம் போடும் போராட்டத்தில் சிலர் ஈடுபட்டனர். அதில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக வாசகங்களை எழுதியிருந்தனர். முன் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி காயத்ரி(32), ஆர்த்தி(32), பிரகதி(28), கல்யாணி(23) மற்றும் மதன்குமார்(20) ஆகியோரை கைது செய்து, ஒரு மணி நேரத்தில் விடுவித்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இதுகுறித்து போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். அதில், அடுத்தவர்களின் வீட்டு வாசலில் கோலம் போட்டு தகராறு செய்ததால் தான் அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்து, வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டார்.

மேலும், கைது செய்யப்பட்ட பெண்களில் ஒருவரான காயத்ரி என்பவர், பாக்., பத்திரிகையாளர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதாகவும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதால், அதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்