Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அதிமுக கைப்பற்றியுள்ள மாவட்டங்கள்

ஜனவரி 03, 2020 12:44

சென்னை: தேர்தல் நடைபெற்ற 27 மாவட்டங்களில் 12 மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது.கோவை, சேலம், தருமபுரி, கடலூர், ஈரோடு, கன்னியாகுமரி மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. கரூர், நாமக்கல், தேனி, திருப்பூர், தூத்துக்குடி, அரியலூர் மாவட்ட கவுன்சில்களை அதிமுக கூட்டணி வென்றது

விருதுநகர்-- விருதுநகரில் 20 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக கூட்டணி 13 இடங்களில் வென்றுள்ளது - திமுக கூட்டணி 7 இடங்களில் வெற்றி

ஈரோடு-- ஈரோட்டில் 19 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 14 இடங்களை வென்றுள்ளது அதிமுக 14 இடங்களை வென்று ஈரோடு மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக. ஈரோட்டில் 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக வென்றுள்ளது

கன்னியாகுமரி-- கன்னியாகுமரியில் 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 6 இடங்களிலும் திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன

கரூர்-- கரூரில் 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 9 இடங்களை வென்றுள்ளது அதிமுக. 9 இடங்களை வென்று கரூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக. கரூரில் 3 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக வென்றுள்ளது

கோவை-- கோவையில் மொத்தம் உள்ள 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 13 இடங்களில் வென்றுள்ளது அதிமுக. கோவை மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 4 இடங்களில் வென்றுள்ளது

சேலம்-- சேலத்தில் மொத்தம் உள்ள 29 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் அதிமுக 15 இடங்களில் வெற்றி - திமுக ஒரு இடத்தில் வெற்றி

தருமபுரி-- மொத்தம் உள்ள 18 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 10 இடங்களை வென்று தருமபுரி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக.  6 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக வென்றுள்ளது

தேனி-- 10 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 8 இடங்களில் அதிமுக வெற்றி - 2 இடங்களில் திமுக வெற்றி

திருப்பூர்-- 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 10 இடங்களை வென்று திருப்பூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக கூட்டணி. 4 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது

தூத்துக்குடி-- 17 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 12 இடங்களை வென்று தூத்துககுடி மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக கூட்டணி. 5 மாவட்ட கவுன்சிலர் பதவி இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது

அரியலூர்-- 12 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 11 இடங்களை வென்று அரியலூர் மாவட்ட கவுன்சிலை கைப்பற்றியது அதிமுக கூட்டணி. 1 மாவட்ட கவுன்சிலர் பதவி இடத்தில் திமுக கூட்டணி வென்றுள்ளது

தலைப்புச்செய்திகள்